ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்னாள் உதவியாளரான பெருமாளிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த போது அவரிடம் உதவியாளராக பணியாற்றியவர் பெருமாள். டெல்லியில் வசித்து வரும் இவரிடம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. ப.சிதம்பரத்தை, இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோர் சந்திப்பதற்கு பெருமாள் ஏற்பாடு செய்தாரா? உள்ளிட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவரின் வெளிநாட்டு பயணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி முகர்ஜி சாட்சியளித்ததன் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.அதனைதொடர்ந்து, நிதி அமைச்சகத்தில் பணியாற்றிய வேறு சிலரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.