ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி கைதாகி தற்போது திஹார் சிறையில் உள்ளார். இவ்விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துவிட்ட போதிலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தை ப.சிதம்பரம் அணுகியுள்ளார். ஜாமின் அளிப்பது குறித்து உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில் ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது. அதற்கு டெல்லி சிபிஐ சிறப்புநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் நாளையும், நாளை மறுநாளும் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற உள்ளது.