ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு! உபரிநீர் வெளியேறி வயல்களில் பாய்வதால் விவசாயிகள் அவதி!

ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு! உபரிநீர் வெளியேறி வயல்களில் பாய்வதால் விவசாயிகள் அவதி!
ஏரியின் நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு! உபரிநீர் வெளியேறி வயல்களில் பாய்வதால் விவசாயிகள் அவதி!
Published on

எடப்பாடி அருகே வெள்ளரி வெள்ளி ஏரியின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, சிலர் விவசாயம் செய்து வருவதால், ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது, மற்ற விளைநிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த அரசிராமணி கிராமம் பட்டக்காரனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் பாரம்பரிய தொழிலான விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பெய்து வரும் தொடர் கனமழையால், வெள்ளரி வெள்ளி ஏரி நிரம்பி, அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, உபரிநீரும் வெளியேற்றப்படுகிறது. இதற்கிடையே, நேற்றிரவு முதல் இப்பகுதிகளில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால், ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் மழைநீர் தேங்கி, வெளியே செல்ல முடியாமல், நெற்பயிர்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. மேலும், சாலையிலும் நீர் செல்வதால், வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கனமழையால், வெள்ளரி வெள்ளி ஏரி நிரம்பியுள்ளதாகவும், இதனால், அதிலிருந்து வெளியேறும் உபரி நீரானது ஒடை மூலம் வேட்டுவப்பட்டி, காதாட்டியூர், ஆதிகாரிப்பட்டி, பட்டக்காரனூர் வழியாக குள்ளம்பட்டி ஏரியில் கலப்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த ஓடைகளை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக சிலர் ஆக்கிரமிப்பு விவசாயம் செய்து வருவதாகவும், இதனால், உபரிநீர் மற்ற விவசாயிகளின் விளைநிலங்களுக்குள் புகுந்து விவசாயத்தை பாதிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும், இதுவரை எந்த ஒரு அதிகாரிகளும், நேரில் வந்து ஆய்வு செய்யவில்லை என்றும், கண்டும் காணாமல் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குமுறுகின்றனர். எனவே, ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் செல்லும் நீர்வழிப்பாதையை தூர்வாறி கொடுக்க வேண்டுமெனவும், மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com