கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த போலீஸ் என்கவுன்ட்டர்கள் என்னென்ன..? மிரள வைத்த ஷாக்கிங் ரிப்போர்ட்!

தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற என்கவுன்ட்டர்களின் விவரங்களை பார்க்கலாம்.
என்கவுன்ட்டர்கள்
என்கவுன்ட்டர்கள்புதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: ஆனந்தன்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணைக் கைதியாக இருந்த திருவேங்கடம் காவல்துறை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் நடைபெற்ற என்கவுன்ட்டர்களின் விவரங்களை பார்க்கலாம்.

  • 2019ம் ஆண்டில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கதிர்வேல் மற்றும் சென்னை வியாசர்பாடி பகுதி சேர்ந்த வல்லரசு ஆகியோர் காவல்துறையால் சுட்டுகொல்லப்பட்டனர்.

  • 2020-ஆம் ஆண்டை பொறுத்தவரை ஒரு என்கவுண்ட்டர் சம்பவம் பதிவானது. சென்னை அயனாவரத்தை சேர்ந்த சங்கரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

  • 2021-ல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முர்தசா, தூத்துக்குடியை சேர்ந்த துரைமுருகன் ஆகியோர் போலிஸ்துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.

  • 2022-ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் மொய்தீன் மற்றும் நீராவி முருகன் ஆகியோர் போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தனர்.

  • 2023-ல் 3 ரவுடிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த சோட்டா வினோத், ரமேஷ் மற்றும் திருச்சியை சேர்ந்த ஜெகன் ஆகியோர் காவல்துறையின் துப்பாக்கிக்கு இரையாகினர்.

என்கவுன்ட்டர்கள்
ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: கைதான திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டது ஏன்? - காவல்துறை விளக்கம்
  • இந்த ஆண்டில், திருச்சி ரவுடி துரைசாமி புதுக்கோட்டை மாவட்டத்தில் வைத்து கடந்த 11-ஆம் தேதி என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

  • தற்போது, சென்னை மாதவரம் அருகே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி திருவேங்கடத்தை காவல்துறையினர் என்கவுண்ட்டர் செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com