மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்த விநாயகன் - விவசாயிகள் கவலை

மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்த விநாயகன் - விவசாயிகள் கவலை
மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்த விநாயகன் - விவசாயிகள் கவலை
Published on

வனப்பகுதிக்குள் விடப்பட்ட காட்டுயானை விநாயகன் அப்பகுதியில் தொடர்ந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருவதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயப் பயிர்களை சேதப்படுத்தி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது காட்டு யானை விநாயகம். இது கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் தேதி வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. பிடிக்கப்பட்ட யானை அடுத்த தினமே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகள் கொண்டுசென்று விடப்பட்டது.

தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்ட காட்டு யானை விநாயகன், கர்நாடக வனப்பகுதி மற்றும் முதுமலை புலிகள் காப்பகவனப் பகுதிக்குள் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அமைந்துள்ள நாகம்பள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கான வாழை மரங்களை தின்று சேதப்படுத்தியுள்ளது. 

விநாயகன் யானையின் நடமாட்டம் குறித்து வனத்துறை தரப்பில் எந்தவித தகவலும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானை விநாயகன் முதுமலை வனப்பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வந்து செல்லும் காட்சி முதன்முறையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.கழுத்தில் ரேடியோ காலர் உடன் விநாயகன் யானை குடியிருப்பை ஒட்டி சுற்றி திரிவது சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக விவசாய பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானை விநாயகனை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இதுதொடர்பாக நேற்று முதுமலையில் வைத்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஊர் மக்கள் மற்றும் வனத்துறையின் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. விநாயகன் யானையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அப்பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com