யானைகள் நடமாட்டம்: கொடைக்கானலில் சுற்றுலாத்தலங்கள் மூடல்
யானைகள் நடமாட்டம் காரணமாக கொடைக்கானல் 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள பிராதன சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள பிரதான சுற்றுலா தலங்களான 12 மைல் சுற்றுச்சாலையில் உள்ள மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை மற்றும் தூண் பாறை பகுதிகள் உள்ளன. இதில் முதன்மையாக உள்ள மோயர் சதுக்கம் பகுதிக்குள், பேரிஜம் வனப்பகுதிக்குள் இருந்து யானைகள் நுழைந்து அங்கு உள்ள தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள கடைகள் சிலவற்றை சேதப்படுத்தியுள்ளன.
இதனால் 12 மைல் சுற்றுச்சாலையை முடக்கி வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இந்த சுற்றுலா தலங்களுக்கு செல்ல தற்காலிகமாக அனுமதி மறுத்தும், யானைகள் நடமாட்டத்தை தொடர்ந்து கண்கானித்து, அவைகள் 12 மைல் சுற்றுச்சாலை பகுதிகளில் இருந்து மீண்டும் பேரிஜம் வனப்பகுதிக்குள் சென்றவுடன் பயணிகள் சுற்றுலா தலங்களை பார்வையிட அனுமதிக்கப்படும் என்றும் வனத்துறை தெரிவித்துள்ளது.