தமிழ்நாடு: இனி வழக்கம்போல மின் கணக்கீட்டுப் பணிகள்

தமிழ்நாடு: இனி வழக்கம்போல மின் கணக்கீட்டுப் பணிகள்
தமிழ்நாடு: இனி வழக்கம்போல மின் கணக்கீட்டுப் பணிகள்
Published on

தமிழ்நாட்டில் மின்சாரம் கணக்கீட்டுப் பணிகள் இனி வழக்கம்போல நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் காரணமாக, தமிழ்நாட்டில் வீடுவீடாகச் சென்று மின் கணக்கீடு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் முந்தைய மாத மின் கட்டணம், குறிப்பிட்ட மாதத்துக்கான 2019-ம் ஆண்டு செலுத்திய கட்டணம் அல்லது கணக்கீட்டுத் தரவுகளை உதவி செயற்பொறியாளரிடம் நுகர்வோர் அளிப்பதன் மூலம் கட்டணத்தை மாற்றியமைப்பது போன்ற வசதிகளை தமிழ்நாடு மின்வாரியம் வழங்கியிருந்தது.

இந்த சலுகைகள் ஜூன் 15 ஆம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மின்சாரம் கணக்கீடு செய்யும் பணிகள் இன்று முதல் மீண்டும் வழக்கம்போல மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. இனி வழக்கம்போல் மின் கட்டணம் கணக்கீடு செய்து, அதற்கான தொகையை செலுத்தும் நடைமுறை பின்பற்றப்படும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com