நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எவ்வளவு யூனிட் மின்சாரம் பயன்படுத்தினால் எவ்வளவு கட்டணம் கட்டவேண்டும் என்பது பற்றிய தெளிவான விளக்கம்
தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படுகிறது, அதற்கு மேல் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் 100 முதல் 200 யூனிட் வரை, 200 முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்படுகிறது, இதில் நிலைக்கட்டணமும் அடக்கம்.
100 யூனிட்க்கு 0 கட்டணம், 110 யூனிட்டுக்கு 35 ரூபாய் கட்டணம், 200 யூனிட்டுக்கு 170 ரூபாய் கட்டணம், 210 யூனிட்டுக்கு 260 ரூபாய் கட்டணம், 290 யூனிட்டுக்கு 500 ருபாய் கட்டணம், 390 யூனிட்டுக்கு 800 ரூபாய் கட்டணம், 500 யூனிட்டுக்கு 1130 ரூபாய் கட்டணம், 510 யூனிட்டுக்கு 1846 ரூபாய் கட்டணம், 600 யூனிட்டுக்கு 2440 ரூபாய், 700 யூனிட்டுக்கு 3100 ரூபாய், 800 யூனிட்டுக்கு 3760 ரூபாய், 1000 யூனிட்டுக்கு 5080 ரூபாய், 1200 யூனிட்டுக்கு 6400 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுயமாக கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பலருக்கு மின் கட்டணம் அதிகமாக வந்ததாக புகார் எழுந்த நிலையில் மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுயமாக மதிப்பிட்டு, அதை போட்டோ எடுத்து வாட்ஸ் அப் வழியாக மின் வாரிய அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும். பின்னர், மின் கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும். பொதுமக்கள் தரும் சுய மதிப்பீட்டு கட்டணங்களில் சந்தேகம் இருந்தால் மீண்டும் மின் வாரிய பணியாளர்களே ரீடிங் எடுப்பார்கள் எனவும் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.