நாகையில் மின்விநியோகம் சரியாக 2 நாட்கள் ஆகும்: மின்வாரிய அதிகாரிகள்

நாகையில் மின்விநியோகம் சரியாக 2 நாட்கள் ஆகும்: மின்வாரிய அதிகாரிகள்
நாகையில் மின்விநியோகம் சரியாக 2 நாட்கள் ஆகும்: மின்வாரிய அதிகாரிகள்
Published on

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால், மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கஜா புயலின் கண்பகுதி நாகை வேதாரண்யம் இடையே நள்ளிரவு 12.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கியது. இதன் காரணமாக நாகை, கடலூர், காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. புயல் கரையை கடக்கத் தொடங்கிய போது புதுச்சேரியில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர்
வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதிகாலை 2 மணியளவில் கஜா புயலின் கண் பகுதி கரையை கடந்த பின், காற்றின் வேகம் அதிகரித்தது.

கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூரில் பெரும்பாலான பகுதிகளில் சூறைக்காற்றால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதே போல் மின்கம்பங்களும் சேதமடைந்தன. காரைக்காலில் மின்மாற்றி மீது மரம் சாய்ந்து விழுந்ததில் மின்மாற்றி வெடித்துச் சிதறியது. இதனால் 6 மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் தொலைதொடர்பும் பாதிக்கப்பட்டது. 

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மின் விநியோகமும் தடைபட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com