தேர்தல் கெடுபுடியால் மாடுகள் விற்பனை மந்தம் – வியாபாரிகள் வராததால் விவசாயகள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஞாயிறு தோறும் கூடும் போச்சம்பள்ளி வாரச்சந்தை தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தையாகும். இங்கு மாடுகளை விற்பனை செய்ய தனி இடம் உள்ளது. மாடுகளை விற்பனைக்காக பிடித்து வரும் விவசாயிகள், வியாபாரிகளிடம் மாடுகளை விற்றுச் செல்வது வழக்கம். இங்கு மாடுகளை குறைந்த விலைக்கு வாங்கி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பது வியாரிகளின் வழக்கம். இதற்காக பல மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு வருகைதருவர்.
இந்நிலையில் தேர்தல் காரணமாக ஆங்காங்கே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கணக்கில்லாமல் எடுத்துவரும் பணத்தை பறிமுதல் செய்து வருவதால், போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு வெளி மாவட்ட வியாபாரிகள் யாரும் வரவில்லை. உள்ளூர் வியாபாரிகள் மட்டும் இருந்தனர். இதனால் மாடுகளை வியாபாரம் செய்ய முடியாமல் விவசாயிகள் மாடுகளை வீடுகளுக்கு திருப்பி அழைத்து சென்றனர்.