தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: மிகக் குறைந்த - அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்!

தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: மிகக் குறைந்த - அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்!
தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: மிகக் குறைந்த - அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்!
Published on

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக்குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 பேர், மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 5 பேர் குறித்து பார்ப்போம்.

சென்னை தியாகராயநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சத்யநாராயணனை விட 137 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இத்தேர்தலில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசம் இதுவே ஆகும். மொடக்குறிச்சி தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் சி. சரஸ்வதி, திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை விட 281 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசியில் வென்ற காங்கிரஸ் வேட்பாளர் பழனிக்கும், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 370 மட்டும் தான். மேட்டூர் தொகுதியில் பாமகவின் சதாசிவம், திமுக வேட்பாளர் ஸ்ரீனிவாசபெருமாளை விட 656 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார்.

காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் ராமுவை விட 746 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். கிருஷ்ணகிரியில் அதிமுக வேட்பாளர் அசோக் குமாருக்கும் திமுக வேட்பாளர் செங்குட்டுவனுக்கும் இடையே 794 வாக்குகளே வித்தியாசம்

விருத்தாசலம் தொகுதியில் காங்கிரஸின் ராதாகிருஷ்ணன், பாமக வேட்பாளர் கார்த்திகேயனை 862 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். நெய்வேலி தொகுதியில் திமுகவின் சபாராஜேந்திரன், பாமகவின் ஜெகனை விட 977 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி கண்டார். மேலும் 12 வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசம் ஆயிரம், இரண்டாயிரங்களிலேயே இருக்கிறது.

இதேபோல 60 ஆயிரம் துவங்கி ஒருலட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் பலர் உள்ளனர்.

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி, பாமக வேட்பாளர் திலகபாமாவை 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் இதுவே அதிக வாக்கு வித்தியாசமாகும். திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ. வேலு, பாரதிய ஜனதா வேட்பாளர் தணிகைவேலை 94 ஆயிரத்து 673 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

பூந்தமல்லி தொகுதியில் திமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி, பாமக வேட்பாளர் ராஜமன்னாரை விட 94 ஆயிரத்து 110 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். அடுத்து எடப்பாடி தொகுதியில் எடப்பாடி கே.பழனிசாமி திமுக வேட்பாளர் சம்பத்குமாரை 93 ஆயிரத்து 802 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

திருச்சி மேற்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் கே.என். நேரு, 85 ஆயிரத்து 109 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் பத்மநாபனை வென்றார். கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் ஆதிராஜாராமை விட 70 ஆயிரத்து 384 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின், பாமகவின் கஸ்ஸாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் அதிகம் பெற்ற வெற்றியை வசப்படுத்தினார். திருச்சுழியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, அதிமுக வேட்பாளர் ராஜசேகரை விட 60 ஆயிரத்து 992 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com