நெல்லை: வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து பாஜக அலுவலகம் அமைப்பு? அலுவலகத்தை அகற்ற நோட்டீஸ்!

நெல்லையில் வாகன நிறுத்துமிடத்தை ஆக்கிரமித்து பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்ட விவகாரத்தில் அலுவலகத்தை அகற்ற உரிமையாளர் மற்றும் மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
bjp office
bjp officept
Published on

செய்தியாளர் - மருதுபாண்டி

திருநெல்வேலி பாராளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமாக நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகம் ஒன்று உள்ளது. இந்த வணிக வளாகத்தின், வாகனம் நிறுத்தத்தில் பாஜக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக திமுகவினர் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் மனு அளித்தனர்.

இந்த புகார் எதிரொலியாக வணிக வளாகத்தில் உள்ள கார் பார்க்கிங்கில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக இணை இயக்குனர் நோட்டீஸ் வழங்கபட்டுள்ளது.

இந்த தேர்தல் அலுவலகத்தை அப்புறப்படுத்தி விட்டு உடனடியாக திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என நோட்டிஸ்சில் தெரிவிக்கபட்டுள்ளது

இந்த விவகாரத்தில் ஏற்கனவே பதிலளித்திருந்த நயினார் நாகேந்திரன் தரப்பு, ‘என்னுடைய வணிக வளாகம், என்னுடைய கார் பார்க்கிங். அவர்களுக்கு என்ன பிரச்னை’ என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று நள்ளிரவுக்குள் தேர்தல் அலுவலகத்தை அகற்ற கெடு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அலுவலகம் அகற்றப்படவில்லை. அதன் காரணமாக மாநகராட்சி நிர்வாகமே ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நகர் ஊரமைப்பு சட்டம் 1971ன் படி நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

bjp office
நாமக்கல்: உணவு இடைவேளையில் ஒன்றாக சென்ற நண்பர்கள்.. புளியமரத்தில் பைக் மோதி பரிதாப உயிரிழப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com