முடிவுக்கு வந்த தவெக கொடி சர்ச்சை.. உடனடியாக விஜய் முன்னெடுத்த மற்றொரு நடவடிக்கை! விவரம்

விஜயின் தமிழக வெற்றிக் கழகக் கொடி விவகாரத்தில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதனால், அக்கட்சியின் கொடி சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.
தவெக கொடி சர்ச்சை
தவெக கொடி சர்ச்சைPT
Published on

விஜய்க்கும் சர்ச்சைக்கும் எப்போதும் பந்தம் உண்டு. திரைப்படம் தொட்டு, கட்சி தொடங்கியது வரை எப்போதும் பிரச்னைகள் அவர் பின்னால் துரத்தி வந்தது. தமிழக வெற்றிக் கழகம் என கட்சி பெயரை அறிவித்த போது, ஒற்று பிழை இருப்பதாக சமூக வலைத்தளத்தில் பேசுப் பொருளாக மாறியது. அதனை உடனடியாக சரி செய்தார் விஜய்.

தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை அறிவித்த உடனே மீண்டும் எதிர்ப்புகள் எழுந்தன. அக்கட்சியின் கொடியில் இரு யானைகள் இடம் பெற்றிருந்தது மற்றொரு பிரச்னையாக உருவெடுத்தது.

தவெக கொடி சர்ச்சை
ஏன் கைகுலுக்கவில்லை? RCB-க்கு எதிரான தோல்விக்கு பிறகு டிவியை உடைத்தாரா தோனி.. வைரலாகும் வீடியோ!

யானையால் எழுந்த பிரச்னை.. முற்றுப்புள்ளி வைத்த தேர்தல்ஆணையம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமாக உள்ள யானையை, விஜய் தனது கட்சியின் கொடியில் பயன்படுத்தக்கூடாது என பகுஜன் சமாஜ் கட்சியினர் போர்கொடி உயர்த்தினர். தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதினர்.

தேர்தல் ஆணையம் - தவெக கொடி
தேர்தல் ஆணையம் - தவெக கொடி புதிய தலைமுறை

அந்த கடிதத்திற்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையர் கட்சிக் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இது குறித்து கடிதம் வெளியிட்டுருக்கும் தேர்தல் ஆணையம், அரசியல் கட்சியின் கொடி மற்றும் கொடியில் இடம்பெறும் சின்னங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதலோ, அங்கீகாரமோ வழங்குவது இல்லை என்று விளக்கமளித்தள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் நேரத்தில் மக்களிடம் வாக்கு சின்னமாக யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகத்தினால் பயன்படுத்த முடியாது என்பதையும் அந்த பதில் கடிதத்தில் விளக்கியுள்ளது.

தவெக கொடி சர்ச்சை
தோனிக்கு 4 கோடி.. ருதுராஜுக்கு 18 கோடி! 2025 IPL-ல் CSK வீரர்களின் சம்பளம் என்னவாக இருக்க வாய்ப்பு?

முன்னெச்சரிக்கையாக விஜயின் அடுத்த நடவடிக்கை..

தற்போது கட்சி கொடிக்கான பிரச்னை தீர்ந்த பிறகு, மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளார் விஜய்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற உள்ளமாநாட்டில் பங்கேற்பவர்கள் தங்கள் வாகனங்கள் தொடர்பான ஆவணங்களை முன்கூட்டியே சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதன் மூலம் எத்தனை நபர்கள் வருவார்கள், வாகன நெரிசலை தவிர்க்க முடியும் என்ற கோணத்தில் இந்த நடவடிக்கையை தமிழக வெற்றிக்கழகம் எடுத்துள்ளது.

இது முழுவதும் சாத்தியமாகுமா? பார்க்க காத்திருப்போம்...

தவெக கொடி சர்ச்சை
”திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன்..” தனிப்பட்ட உரையாடலுக்கு காத்திருப்பதாக ஆர்த்தி ரவி பதிவு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com