மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆட்சேபனை வரவில்லை:  தேர்தல் ஆணையம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆட்சேபனை வரவில்லை: தேர்தல் ஆணையம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆட்சேபனை வரவில்லை: தேர்தல் ஆணையம்
Published on

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நடந்த மதுரை பொதுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை அறிவித்தார். இதனையடுத்து அக்கட்சியின் விண்ணப்பத்தை பரிசீலனைக்கு ஏற்ற இந்திய தேர்தல் ஆணையம், கட்சியை பதிவு செய்வதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மே 31ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள்‌ நீதி மய்யம் கட்சியை பதிவு செய்ய எந்த ஆட்சேபனை மனுவும்‌ வரவில்லை என இந்திய தேர்தல் ஆணை‌யம் அறிவித்துள்ளது. எனவே கட்சி‌யை பதிவு செய்வது தொடர்பாக வரும் 20ஆம் தேதி கட்சி நிர்வாகிகள் நேரில் ஆஜராக இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினமே கட்சியின் சின்னம் குறித்து மக்கள் நீதி மய்யம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com