தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேத்ல் நடைபெற உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்பு இருப்பதால், வாக்குச்சீட்டு முறையை மக்களவை தேர்தலில் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன. ஆனால் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக இதனை மறுத்துவிட்டது.
இந்நிலையில் வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையம், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வசதி மக்களவைத் தேர்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளது. அதனால் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடனும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் பொருத்தப்படும்.இதன்காரணமாக நாம் வாக்களித்தது சரியாகத் தான் விழுந்திருக்கிறதா என்பதை ஒப்புகைச் சீட்டு மூலம் நாம் உறுதி செய்து கொள்ள முடியும்.