எவரெஸ்ட்டில் எட்டு‌ முறை ஏறியவர் மாயம்

எவரெஸ்ட்டில் எட்டு‌ முறை ஏறியவர் மாயம்
எவரெஸ்ட்டில் எட்டு‌ முறை ஏறியவர் மாயம்
Published on

எவரெஸ்ட் சிகரத்தில் 8 முறை ஏறி சாதனைப் படைத்த பெம்பா ஷெர்பா மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங்கைச் சேர்ந்தவர் பெம்பா ஷெர்பா. மலையேற்றத்தில் வல்லுநரான அவர் உலகின் மிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை 8 முறை ஏறி சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 20ம் தேதி தனது குழுவினருடன் ஏழு ஆயிரத்து 627 மீட்டர் உயரமுள்ள சாசர் காங்க்ரி சிகரத்தை அடைந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெம்பா திரும்பி வரும்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம் கரகோரம் பகுதியின் பனிப்பாறையில் இருந்து தவறி விழுந்ததாக இந்தோ - திபெத் எல்லை காவலர்கள் தெரிவித்துள்ளனர். பெம்பா ஷெர்பா மாயமான பகுதியில் நேற்று முதல் தேடுதல் பணியில் இந்தோ-திபெத் எல்லை காவலர்கள் ஈடுபட்டு வருகின்றர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com