திருச்சி வந்தது எகிப்து வெங்காயம் : கொஞ்சம் குறைந்தது விலை

திருச்சி வந்தது எகிப்து வெங்காயம் : கொஞ்சம் குறைந்தது விலை
திருச்சி வந்தது எகிப்து வெங்காயம் : கொஞ்சம் குறைந்தது விலை
Published on

எகிப்திலிருந்து 30 டன் பெரிய வெங்காயம் திருச்சி வெங்காய மார்கெட்டுக்கு வந்துள்ளது.

வெங்காயத்தின் விலை இந்தியா முழுவதும் உச்சத்தில் உள்ளது. தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் திருச்சியில் ரூ.180 வரை விற்பனையானது. நேற்று ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, ஒரு கிலோ சிக்கனுக்கு நிகராக வெங்காயத்தின் விலையும் இருந்தது. இந்நிலையில் எகிப்திலிருந்து திருச்சி வெங்காய மார்க்கெட்டுக்கு 30 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளது. இந்த வெங்காயம் கிலோ 120 ரூபாய் என மொத்த விற்பனை செய்யப்படுகிறது.

இதுதவிர பெங்களூருவிலிருந்து திருச்சி பழைய பால்பண்ணை அருகே உள்ள வெங்காய மண்டிக்கு பெரிய வெங்காயம் 150 டன் இன்று வந்தது. இந்த வெங்காயம் மொத்த விற்பனையாக 60 ரூபாயிலிருந்து 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மேலும், பெரம்பலூர், துறையூர் மற்றும் நாமக்கல் பகுதியில் இருந்து 75 டன் வெங்காயம் வந்ததுள்ளது. இறக்குமதியான வெங்காயத்தில் சின்ன வெங்காயம் 30 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை மொத்த விற்பனையாக விற்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com