நாமக்கல்: முட்டையின் கொள்முதல் விலை உயர்வு

நாமக்கல்: முட்டையின் கொள்முதல் விலை உயர்வு
நாமக்கல்: முட்டையின் கொள்முதல் விலை உயர்வு
Published on

நாமக்கல் பண்ணைகளில் முட்டையின் கொள்முதல் விலை, இரண்டு நாள்களில் 25 காசுகள் அதிகரித்துள்ளது. ஒரு முட்டையின் விலை 5 ரூபாய் ஐந்து காசுகளாக உயர்ந்துள்ளது.

நாமக்கல் பண்ணைகளில் முட்டைகளின் கொள்முதல் விலை, கடந்த பத்தாம் தேதி 4 ரூபாய் 80 காசுகளாக இருந்தது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் முடிவின்படி, நேற்று ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை, 15 காசுகள் உயர்த்தப் பட்டது. அதன்படி நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை 4 ரூபாய் 95 காசுகளாக உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக இன்று கொள்முதல் விலை பத்து காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு முட்டையின் கொள்முதல் விலை, ஐந்து ரூபாய் ஐந்து காசுகளாக உயர்ந்துள்ளது. ஒரு முட்டையின் விலை 2 நாட்களில் 25 காசுகள் உயர்ந்துள்ளது. சென்னையில் முட்டையின் விற்பனை விலை 5 ரூபாய் 20 காசுகளாக உள்ளது. தேவை அதிகரிப்பு, கோழிகளின் தீவனங்களின் விலையேற்றத்தால் உற்பத்திச் செலவு அதிகரிப்பு ஆகியவையே முட்டையின் கொள்முதல் விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி முட்டையின் கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளாக இருந்ததே அதிக பட்சமாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com