கிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர்? - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி

கிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர்? - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி
கிருஷ்ணா, கோதாவரி நதிகளை இணைத்து தமிழகத்துக்கு தண்ணீர்? - நிதின் கட்கரிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி
Published on

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்தின் தண்ணீர் பிரச்னை தீர்க்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள வாக்குறுதிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக பாரதிய ஜனதாவின் ட்விட்டர் பக்கத்தில் உள்ள பதிவில், கோதாவரி, கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வருவது தான் தனது முதல் வேலை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருப்பதாக குறி‌ப்பிடப்பட்டிருந்தது. மேலும், தமிழகம் பாரதிய ஜனதாவை புறக்கணித்தாலும், பாரதிய ஜனதா அரசு கடமை தவறாது எனவும் அந்தப் பதிவில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தின் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாக்குறுதி அளித்துள்ளதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், தற்போதைய இக்கட்டான சூழலில் இந்தத் ‌திட்டம் தமிழகத்துக்கு அவசியம் தேவை என்றும், இந்தத் திட்டத்தால், தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க முடியும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com