உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முதலிடம் - முதலமைச்சர் பழனிசாமி
Published on

இந்தியாவிலேயே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவ பணியாளர் வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 584 மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் பேசிய முதல்வர், இந்தியாவிலேயே சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று எனக் கூறினார். 

மேலும், பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதமும், பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மருத்துவ அலுவலர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, தங்கமணி, கே.பி.அன்பழகன், காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com