கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கேரள மாநிலம் இடுக்கியில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது. இதனால் அமராவதி அணைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை திமுக அரசு தடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தபின் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், நடப்பு தேர்தலில் வாக்கு சதவீதத்தை அறிவிப்பதில் குளறுபடி நீடிப்பதாகவும், வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் போவது ஐயத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.