புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழிக்கு மாற்றப்பட்டிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் கூறியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அனைத்து மாநிலங்களுக்கும் பொது மொழியான ஆங்கிலத்தில் இருந்த சட்டத்தின் பெயர்களை, இந்தியில் மாற்றியிருப்பது அப்பட்டமான மொழித் திணிப்பு என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “இந்தி திணிப்பானது பல மொழி, கலாசாராங்களை கொண்ட தேசத்தின் அடிப்படை நீதி மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. அமலுக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்களை மாற்றியமைத்து குளறுபடிகளை களைந்து நெறிப்படுத்த வேண்டும்.
இந்தி மொழியில் உள்ள சட்டத்தின் பெயர்களை மீண்டும் ஆங்கிலத்திலேயே மாற்றம் செய்ய வேண்டும்” என மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.