எயிட்ஸ் உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு அவர்களை அரவணைத்து ஆதரவளிக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி எனத் தெரிவித்துள்ளார்.
1988-ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் தினத்தின் மையக்கருத்து ‘உலகளாவிய ஒற்றுமை, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளுதல்’ ஆகும்.
தமிழகத்தில் எச்.ஐ.வி தொற்றின் சதவீதம் 2010 - 11 ஆம் ஆண்டு 0.38 சதவிகிதத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு 0.18 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தை தமிழகத்தை எயிட்ஸ் இல்லாத மாநிலமாக உருவாக்கி எயிட்ஸ் உள்ளவர்களும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு அவர்களையும் மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.