“விஜய்யுடன் கூட்டணியா? நான் முதல்வர்; அவர் துணை முதல்வரா?” - எடப்பாடி பழனிசாமி

“விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு முடிவு எடுக்கப்படும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
vijay and eps
vijay and epspt
Published on

செய்தியாளர்: M.ரமேஷ்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிந்த நிலையில் உள்ள 171 தொழிலாளர்களுக்கு ஒரு கோடியே 71 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

admk office
admk officept desk

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்....

“உதவி பேராசிரியர் பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்?”

“அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 171 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. விபத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கினோம். ஆயிரம் கவுரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த காலி இடங்கள் எப்போது நிரப்பப்படும்? கல்லூரிகளில் உதவி பேராசியர் பணி அதிகம் காலியாக உள்ளது. இது மாணவர்களின் எதிர்கால பிரச்னை என்பதால் அரசு உடனடியாக காலியிடங்களை நிரப்ப வேண்டும்

vijay and eps
‘பாசிசமா... பாயாசமா...’ - விஜய்யின் பேச்சு சினிமா வசனம் போல் உள்ளது – ப.சிதம்பரம் விமர்சனம்

“தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்”

பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம் வழங்க வேண்டும். சென்னையில் பூங்காங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக செய்தி வருகிறது. இது கண்டிக்கத்தது. அரசு, மக்களின் நலன் கருதி மாநகராட்சியில் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து விஜய் மாநாடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்...

“விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார்”

தவெக மாநாடு
தவெக மாநாடுமுகநூல்

“ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. விஜய் அவரது கொள்கையை தெரிவித்திருக்கிறார். அது சரியா தவறா என்று நான் சொல்ல முடியாது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் இருக்கிறது. விஜய் இப்போதுதான் கட்சி தொடங்கி மாநாடு நடத்தி இருக்கிறார். கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில் சூழலுக்கு தகுந்தவாறு அமைக்கப்படும். மற்றபடி நாங்கள் தவெக-வுடன் கூட்டணி வைத்து, அப்போது நான் முதல்வரானால் அவரை துணை முதல்வராக்குவேனா என்றெல்லாம் கற்பனை கேள்வி கேட்டால், என்னால் பதில் சொல்ல முடியாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் விஷயம். அப்போது பேசலாம்” என்றார்.

vijay and eps
“பாஜக எதிர்ப்பில் உடன்பாடு இல்லை என்று புரிந்து கொள்வதா?” - விஜய்யிடம் திருமாவளவன் கேள்வி!

“அதிமுகவில் இருந்து யாரும் பிரிந்து செல்லவில்லை. அதிமுகவில் இருந்து சிலர் நீக்கப்பட்டுள்ளனர். எனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம்” எனவும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com