தமிழ்நாடு
மணல் குவாரிகளை குறிவைக்கும் அமலாக்கத்துறை.. அடுத்தது இந்த மாவட்டம்தான்!
தமிழகம் முழுவதும் மணல் குவாரி ஒப்பந்தம் செய்பவர்கள் வீடு, அலுவலகங்கள், குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
மணல் ஒப்பந்ததாரர் ராமச்சந்திரனின் அலுவலகத்தில் சோதனை நடத்தப்படுவதால், கரூர் மாவட்டத்தில் நன்னியூர் புதூர், நெரூர் பகுதிகளில் உள்ள குவாரிகளில் மணல் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் கந்தனேரி பாலாற்றில் செயல்பட்டு வரும் அரசு மணல் குவாரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த செவிட்டுரங்கன்பட்டியிலுள்ள மணல் சேமிப்பு கிடங்கில் காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திருச்சி திருவானைக்காவல் மற்றும் கொண்டையம்பேட்டை கொள்ளிடம் ஆற்று மணல் குவாரிகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கொற்றலை ஆற்றில் உள்ள மணல் குவாரியில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கரூர், திருச்சி, நாமக்கல், வேலூர், திருவள்ளூர் என அமலாக்கத்துறை சோதனை நீள்கிறது.