தமிழ்நாடு
திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம்
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு சுமார் ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம் திமுக எம்பி ஜெகத்ரசகனுக்கு ரூ.908 கோடியை அபராதமாக அமலாக்கத்துறை விதித்துள்ளது. சட்டவிரோத பணப்பறிமாற்ற வழக்கில் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களின் இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ரூ.89.19 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.