முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசாவின் 15 அசையா சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சராகவும், வனத்துறை அமைச்சராகவும் ஆ.ராசா இருந்தபோது 15 அசையா சொத்துகளை பினாமி பெயரில் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்து பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதன் நீட்சியாக 15 அசையா சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.