இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் மறைவு - முதல்வர் இரங்கல்!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவரும், இவாஞ்சலிகல் சர்ச் ஆஃப் இந்தியாவின் பேராயருமான எஸ்றா சற்குணம் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.
எஸ்றா சற்குணம்
எஸ்றா சற்குணம்புதிய தலைமுறை
Published on

தமிழ்நாட்டில் சுமார் 6 லட்சம் கிறிஸ்தவர்களை கொண்ட சபை இவாஞ்சலிகல் சர்ச் ஆப் இந்தியா. அதன் பேராயராகவும், இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவராகவும் இருந்து வந்தார் எஸ்றா சற்குணம். 86 வயதான அவர், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக உடல் நலக்குறைவுக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

எஸ்றா சற்குணம்
எஸ்றா சற்குணம்

இந்நிலையில் அவர், கீழ்பாக்கத்திலுள்ள தனது வீட்டில் நேற்று இரவு காலமானார். எஸ்றா சற்குணம், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சி தலைவர்களுடனும் நெருங்கி பழகியவர். அரசியல் கருத்துகளை வெளிப்படையாக பேசி வந்தவர்.

எஸ்றா சற்குணம்
“தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளுக்காக ஒன்றிய அரசுடன் போராடிக் கொண்டிருக்கிறார் முதல்வர்” - MP கனிமொழி

எஸ்றா சற்குணத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எஸ்றா சற்குணம், திராவிட இயக்க கருத்தியலுடன் பின்னிப்பிணைந்தவர். சிறுபான்மையினரின் நலன் பாதுகாக்கப்படவும், அவர்களது உரிமைகள் வென்றெடுக்கப்படவும், தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டு வந்தவர். எஸ்றா சற்குணத்தின் மறைவு, கிறிஸ்தவ பெருமக்களுக்கு மட்டுமின்றி, சமூகநிதியின்பால் அக்கறை கொண்ட கொண்ட அனைவருக்கும் நேர்ந்த பேரிழப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

எஸ்றா சற்குணத்தின் உடல், எம்பாமிங் செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் வின்சென்ட் பார்க்கர் சேவை மையத்தில் வரும் 25ஆம் தேதி வரை வைக்கப்படவுள்ளது. பின்னர் வரும் 26 ஆம் தேதி, வானகரத்திலுள்ள ஜீசஸ் கால் சென்டரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதைத்தொடர்ந்து உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com