கலால் வரி குறைப்பு எதிரொலி: சென்னையில் குறைந்த பெட்ரோல் டீசல் விலை

கலால் வரி குறைப்பு எதிரொலி: சென்னையில் குறைந்த பெட்ரோல் டீசல் விலை
கலால் வரி குறைப்பு எதிரொலி: சென்னையில் குறைந்த பெட்ரோல் டீசல் விலை
Published on

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி பரிசாக பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான வரி 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளும் எரிபொருள் மீதான வாட் வரியை குறைத்து, நுகர்வோருக்கு ஏற்பட்டிருக்கும் சுமையை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிக்குறைப்பு பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார். இம்முடிவால் விலைவாசியும் குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கொடுத்த அழுத்தம் எதிரொலியாக கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து விவாதிக்க எண்ணெய் வள நாடுகளின் அமைப்பான ஓபெக்கின் கூட்டம் நடைபெறுகிறது. உற்பத்தியை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டால் அடுத்து வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை குறையக் கூடும். உற்பத்தி அதிகரிக்கப்படாவிட்டால் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் கலால் வரி குறைப்பு அறிவிப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் 26 காசுகள் குறைந்து ரூ. 101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 11 ரூபாய் 16 காசுகள் குறைந்து 91 ரூபாய் 43 காசுகளாகவும் உள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com