ரபேல் பேர ஊழல் பற்றிய புத்தக வெளியீட்டுக்குத் தடை!

ரபேல் பேர ஊழல் பற்றிய புத்தக வெளியீட்டுக்குத் தடை!
ரபேல் பேர ஊழல் பற்றிய புத்தக வெளியீட்டுக்குத் தடை!
Published on

ரபேல் பேர ஊழல் பற்றிய புத்தகத்தை வெளியிடுவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. 

பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இது தொடர்பான புத்தகம் ’நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. விஜயன் என்பவர் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இன்று மாலை வெளியிடப்பட இருந்தது. 

இந்திய சமூக விஞ்ஞானக் கழகத் தலைவர் வீ.பா.கணேசன் வெளியிட, இந்து குழும தலைவர் என்.ராம் இன்று வெளியிட்டுப் பேச இருந்தார். அ.குமரசேன், இயக்குனர் ராஜூ முருகன், பத்திரிகையாளர் ஜெயராணி, புத்தகத்தைப் பதிப்பித்துள்ள பாரதி புத்தகாலயம் நாகராஜ் ஆகியோர் பேச இருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருப்பதால், புத்தகத்தை வெளியிட, ஆயிரம் விளக்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரி எஸ்.கணேஷ் தடை விதித்துள்ளார். மீறி வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com