சென்னையை குளிப்பாட்டிய மழை... குறிசொன்ன பிரதீப் ஜான்... வரப்போகுது குளுகுளு கோடை!

சென்னையில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
பிரதீப் ஜான்
பிரதீப் ஜான்pt web
Published on

தென்னிந்திய பகுதிகளின்மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 11 ஆம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் வாட்டிய நிலையில், திடீர் மழையால் சென்னையில் குளிர்ச்சி நிலவியது.

பிரதீப் ஜான்
தமிழ்நாட்டு மக்களுக்கு குட் நியூஸ் | அடுத்த 2 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை!

இதனிடையே, இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரதீப் ஜான்
Good news.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை.. எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்பு?

தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான், தன் சமூகவலைதளபக்கத்தில், “ஜெய் ஜக்கம்மா... நல்ல காலம் பிறக்குப்போகுது” என பதிவிட்டு குறிசொல்வது போல “வெயில் குறையப்போகுது, தமிழ்நாட்டில் நல்ல மழை வரப்போகுது” என கணித்து கூறியுள்ளார். இதையடுத்து தமிழக மக்கள் குளுகுளு கோடையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com