சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்குப் பயன்படும் வகையில், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத சோலார் அல்லது எலக்ட்ரிக் ஆட்டோக்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
நான்கு மெட்ரோ நிலையங்களில் முதல்கட்டமாக இ ஆட்டோக்கள் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த வாகனங்கள் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். பெரும்பாலும் பெண்கள்தான் ஓட்டுநர்களாக நியமிக்கப்படவுள்ளார்கள். தற்போது இ ஆட்டோ திட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவருவதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப் படம்
கடந்த வாரத்தில் பெண்களால் இயக்கப்படும் சோலார் மற்றும் எலக்ட்ரிக் ஆட்டோக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அதில் ஜிபிஎஸ், சிசிடிவி, எச்சரிக்கை பட்டன் போன்ற பல வசதிகள் உள்ளன. ஏற்கெனவே மெட்ரோ நிலையங்களில் குறிப்பிட்ட தூரங்களுக்கு ஷேர் ஆட்டோக்கள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.
சென்னை மெட்ரோ ஆப்ஸ் சார்ந்த இ பைக் வசதியும் சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்திவருகிறது. 2019ம் ஆண்டில் ஆலந்தூர் ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இ ஆட்டோ சேவை பின்னர் நிறுத்தப்பட்டது. மீண்டும் எலெக்ட்ரிக் ஆட்டோ சேவையைத் தொடங்கும் திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது சென்னை மெட்ரோ.