கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் விழா- துடப்பத்தால் அடிவாங்கி கிராம மக்கள் நேர்த்திக் கடன்

கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் விழா- துடப்பத்தால் அடிவாங்கி கிராம மக்கள் நேர்த்திக் கடன்
கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் விழா- துடப்பத்தால் அடிவாங்கி கிராம மக்கள் நேர்த்திக் கடன்
Published on

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற துரியோதனன் படுகளம் விழாவில் துடப்பத்தால் அடிவாங்கி கிராம மக்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கூளியம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் திருக்கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. இதில், அம்மனேரி, ஒம்பலக்கட்டு. சவுளுர் ஆகிய கிராம மக்கள் ஒன்று திரண்டு நடத்திய இந்த மகாபரத திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக துவங்கியது.

இந்நிலையில், கிருஷ்ணன் பிறப்புடன் துவங்கிய இந்த மகாபாரத இதிகாச திருவிழாவின் போது அம்மன் பாஞ்சாலி தேவி திருக்கல்யாணம், பாண்டவர் பிறப்பு, பாண்டவர் அரக்கு மாளிகை, அர்சுனன் தபசு, சுபத்திரை திருக்கல்யாணம், கண்ணன் தூது, அரவான் கடபலி, அபிமன்னன் சண்டை உள்ளிட்ட பல்வேறு இதிகாச நிகழ்ச்சிகள் திருப்பதி நாடகாசபையின் சார்பில் நடைப்பெற்று வந்தது.

கடந்த 20 நாள்களாக நடைபெற்று வந்த இந்த மகாபாரத இதிகாச திருவிழாவின் கடைசி நாளன இன்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்ச்சியாக நடைபெற்றது. இதில் களிமண்ணால் மிகப் பெரிய அளவில் உருவாக்கப்பட்ட தூரியோதனனின் உருவத்தை விமன் வதம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் பின் கூடி இருந்த மக்கள் வெள்ளத்தில் திரௌபதி பாஞ்சாலி தனது கூந்தலை முடிந்து தனது சபதத்தை நிறைவேற்றியதை அடுத்து கிராம மக்கள் பஞ்சபாண்டவர்களின் சிலையை தூக்கி ஆடி ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் துடப்பத்தால் தலையில் அடி வாங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com