குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மருத்துவ குணமிக்க அரியவகை துரியன் பழ சீசன் தொடங்கியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையத்தில் பார்லியார் அரசு தோட்டக்கலை பண்ணை உள்ளது. இதில் அரிய வகை 34 தூரியன் பழமரங்கள் உள்ளன. இதில் விளையும் பழங்களை சுற்றுலாப் பயணிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இப்பழங்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும் இந்த பழங்கள் கிலோ 600 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிய வகை துரியன் பழங்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதளவில் கவர்வது குறிப்பிடத்தக்கது.