மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல - துரைமுருகன்

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல - துரைமுருகன்
மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல - துரைமுருகன்
Published on

மேகதாது அணையை எந்த நிலையிலும் சட்டப்படி தடுத்தே தீருவோம் என அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடக அமைச்சர் கூறியதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர், ‘’ஒரு மாநிலத்திற்குள் ஓடுகிற நீர் அந்த மாநிலத்திற்கே என்று சொந்தம் கொண்டாட முடியாது. நதிநீர் என்பது தேசிய சொத்து என்பதை கர்நாடக அமைச்சர் அறிந்திருப்பார் என கருதுகிறேன். தமிழகத்திற்கு வரும் நீரை மறித்து அணை கட்டுவோம் என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை புறக்கணிப்பது போன்றது. இதையும் மீறி அணை கட்டுவோம் என்பது நீதிமன்ற தீர்ப்பை மதிக்கமாட்டோம் என கூறுவதுபோல் தெரிகிறது.

இத்தகைய போக்கு ஒரு மாநிலத்திற்குள் வளர்வதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது நல்லதல்ல. இதுபோன்ற போக்கு அண்டை மாநிலத்தின் உறவிற்கும் உகந்தது அல்ல’’ என்று நடுவர் மன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி கர்நாடக அமைச்சருக்கு துரைமுருகன் பதில் அளித்திருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com