விருதுநகர் | போராட்டத்தின்போது பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்.. 7 பேர் கைது - போலீசார் விசாரணை

விருதுநகர் திருச்சுழி அருகே கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயன்ற அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 7 பேரை பிடித்த காவல்துறையினர், ஒருவரை கைது செய்துள்ளனர்.
டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல்
டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல்pt web
Published on

திருச்சுழி நோக்கி லோடு வேனை ஓட்டிச்சென்ற ஓட்டுநர் காளிகுமாரை, கேத்தநாயக்கன்பட்டி விலக்கு பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

அந்த கும்பல் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் காளிக்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடியது. இதில் தலை உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த காளிக்குமார் திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

செம்பொன்நெறிஞ்சி பகுதியை சேர்ந்த காளீஸ்வரன், லட்சுமணன், அருண்குமார் மற்றும் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் ஆகியோரை பிடித்து திருச்சுழி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக ஏற்பட்ட முன் பகையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல்
உச்சம் பெறும் கேரள சினிமா பாலியல் குற்றச்சாட்டுகள்.. நடிகர் நிவின்பாலி மீது பாலியல் வழக்குப்பதிவு!

இந்நிலையில், கொலை வழக்கில் மேலும் இருவருக்கு தொடர்புள்ளதாகவும் அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கொலை செய்யப்பட்ட காளிக்குமாரின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருச்சுழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அங்கு வந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான காவல்துறையினர் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றனர்.

அப்போது போராட்டக்காரர்கள் திடீரென டிஎஸ்பி காயத்ரியின் தலை முடியை இழுத்து தாக்க முயன்றனர்.

இதை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. அப்போது காவல்துறையினர் குறைந்த அளவிலே இருந்ததால் போராட்டக்காரர்கள் அவர்களை தள்ளிவிட்டு நேராக M.S. கார்னர் பகுதியான திருச்சுழி சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் அருப்புக்கோட்டையில் டிஎஸ்பி காயத்ரி போராட்டம் நடத்தியவர்களை எச்சரித்து கலைந்து போகச்செய்தார்.

டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல்
“நிறையபேர் களத்தில்.. நாடாளுமன்ற தேர்தல் சூழல் 2026-ல் இருக்காது”-கே.என்.நேரு பேசியதன் அர்த்தம்என்ன?

டிஎஸ்பி மீதான தாக்குதல் தொடர்பாக ஏழு பேரை பிடித்து விசாரித்து காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வந்தனர். பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

பெண் டிஎஸ்பி காயத்ரியை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஏற்கனவே பாலமுருகன் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது பொன் குமார், காளிமுத்து, சஞ்சய் குமார், பாலாஜி, ஜெயக்குமார், ஜெயசூர்யா ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய முருகேசன் என்ற வெடிகுண்டு முருகேசனை திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

டிஎஸ்பி மீது நடத்தப்பட்ட தாக்குதல்
தொடர்ந்து 10ஆண்டுகள்! மனைவிக்கு போதைப்பொருள் கொடுத்து 50 பேரை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்த கணவர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com