தமிழகம் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகம் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
தமிழகம் புதுவையில் வறண்ட வானிலை நிலவும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை பெய்த மிதமான மழையின் காரணமாக வெப்பநிலை 10 டிகிரிக்கும் கீழ் குறைவாக பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி வரும் ஜனவரி 9ஆம் தேதி வரையும் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை மற்றும் மேகமூட்டம் தொடர்ந்து இருக்குமென்றும் வெப்பநிலை 13-ல் இருந்து 15 டிகிரி வரை பதிவாகும் எனவும் தெரிவித்திருந்தது.

இன்று அதிகாலை நிலவரப்படி தலைநகர் டெல்லியில் வெப்பநிலை 10.9 டிகிரி ஆக பதிவானது. அடுத்த சில நாட்களுக்கும் வெப்பநிலை குறைவாகவே பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தைவிட குறைவான வெப்பநிலை தான் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குளிர்காலத்தில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி தான் மிகக் குறைந்த அளவாக 3.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. வானிலை எவ்வாறு மாற்றம் அடைந்ததாக இருப்பினும் கூட தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் என்பது தொடர்ந்து மிக மோசமான கட்டத்திலேயே இருந்து வருகிறது

இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். நாளை மற்றும் 7 ஆம் தேதி தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 8 தேதி தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

9 ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மூடுபனி எச்சரிக்கை:
இன்று முதல் நாளை வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும் நாளையும் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com