சென்னையில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியப் புகாரில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மது வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதிகமான சாலை விபத்துகள் சென்னையில் ஏற்படுகின்றன. சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிச் செல்வது அதிகரித்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே கண்காணிப்பு பணிகளும் அதிகமாக நடந்துவருகின்றனர்.
அதன் அடிப்படையில் நடந்த சோதனையில், சென்னையில் கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டியதற்காக 15 ஆயிரத்து 620 பேரின் உரிமங்களை ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.
அதில் இதுவரை 6 ஆயிரத்து 421 பேரின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.