பொள்ளாச்சியில் குடிபோதையில் கூலித் தொழிலாளி ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள கொங்குநாட்டான்புதூரைச் சேர்ந்தவர் குமார். கட்lட தொழிலாளியான இவர், மதுக்கடைகள் முடப்பட்டதால் நீண்ட நாட்களாக மது குடிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் நேற்று, குமார் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது. மேலும் அருகில் இருந்தவரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தன்னுடன் தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரி பொள்ளாச்சி வடக்கிபாளையம் ரோட்டில் உள்ள தனியார் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக ரகளையில் ஈடுபட்டு வந்தார்.
இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் குடிபோதையில் இருந்த குமார் உடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை கீழே இறங்க வைத்தனர். இதையடுத்து அவரை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.