இதையடுத்து ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி தினேஷ்குமாரின் பெற்றோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை என்றாலும், இருசக்கர வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதால், இன்சூரன்ஸ் நிறுவனம் மனுதாரர்களுக்கு 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீட்டை ஆண்டுக்கு 7.5 சதவிகித வட்டியுடன் அடிப்படையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.