போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
சென்னையில் தலைமைச் செயலாளர், டிஜிபி, போக்குவரத்து செயலாளர் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள போக்குவரத்து ஆணையர், உச்சநீதிமன்ற சாலை பாதுகாப்புக் குழு அறிவுறுத்தலின் படி, சாலை விபத்துகளை தடுக்க புதிய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தெரிவித்தார்.
அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு 6 மாதம் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறியுள்ளார். செல்போன் பேசியடி வாகனம் ஓட்டுவது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கை மீறுவது, அதிக பாரம் ஏற்றவது, சரக்கு வாகனத்தில் மக்களை ஏற்றிச் செல்வது போன்றவை போக்குவரத்து விதிமீறலாகும். வாகன ஓட்டுநர், அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.