ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் : ஏடிஜிபி ரவி

ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் : ஏடிஜிபி ரவி
ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் : ஏடிஜிபி ரவி
Published on

சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என ஏடிஜிபி ரவி கூறியுள்ளார். 

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்பதன் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து திருச்சியில் போலி பெயரில் சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. 

இதையடுத்து தனிப்படை போலீசாரின் தீவிர நடவடிக்கையால், திருச்சியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இதுகுறித்து ஏடிஜிபி ரவி கூறுகையில், ‘நிலவன் ஆதவன்’ என்ற போலி கணக்கின்மூலம் ஃபேஸ்புக்கில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். திருச்சியில் இதுவரை 3 போலி கணக்குகள் மூலம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்வது தெரியவந்துள்ளது. பல போலி பெயர்களில் கடந்த 2 ஆண்டுகளாக கிறிஸ்டோபர் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம்” எனத் தெரிவித்தார்.

ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீது கைது நடவடிக்கை பாயும் எனவும் ஏற்கெனவே போலீசார் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சமூக வலைதளங்களில் இச்செய்தி பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆபாச வீடியோக்களை பார்த்தவர்கள் பயப்பட வேண்டாம் என ஏடிஜிபி ரவி கூறியுள்ளார். அதேசமயம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்த்தாலோ, பதிவேற்றம் செய்தாலோ, பகிர்ந்தாலோ அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை பாயும் எனத் தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com