வந்தோருக்கு வாழ்வு தரும் டாலர் நகரம் திருப்பூர்... பட்ஜெட்டில் ஏராளமான எதிர்பார்ப்புகள்..!

வந்தோருக்கு வாழ்வு தரும் டாலர் நகரம் திருப்பூர்... பட்ஜெட்டில் ஏராளமான எதிர்பார்ப்புகள்..!
வந்தோருக்கு வாழ்வு தரும் டாலர் நகரம் திருப்பூர்...  பட்ஜெட்டில் ஏராளமான எதிர்பார்ப்புகள்..!
Published on

இந்தியாவின் டாலர் நகரம், பின்னலாடை நகரம் என பல பெருமைகள் கொண்டது திருப்பூர். தேடி வந்தோருக்கெல்லாம் வாழ்வு கொடுக்கும் இந்த நகரத்தின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

சர்வதேச அளவில் ஜவுளித் துறையில் திருப்பூருக்கு முக்கிய இடம் உண்டு. இங்கு தயாராகும் ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா என பல நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.

உலகப் புகழ் பெற்ற ஆடை நிறுவனங்கள் ‌பலவும் விற்பது திருப்பூர் ஆடைகளைத்தான். 6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை தரும் இந்நகரம் மத்திய அரசுக்கு ஏராளமான அந்நியச் செலாவணியையும் அள்ளித் தருகிறது. இவ்வளவு பெருமைகள் இருப்பினும் தங்கள் ஊரில் சாலை உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள். குறிப்பாக தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தர அரசின் உதவியை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்

பின்னலாடை வர்த்தகத்தில் அபரிமித வளர்ச்சி வாய்ப்புகள் உள்ள நிலையில் இதை மேம்படுத்த வசதியாக ஆராய்ச்சி மையம் தேவை என்றும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர். பின்னலாடை தொழில் துறை சார்பில் மத்திய நிதியமைச்சரிடம் நேரில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை ஏற்கப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் ஏற்றுமதியாளர்கள்.

புதிதாக வர உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தங்களுக்கு பாதகமாக சில அம்சங்கள் உள்ளதாகவும் அதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்படுகிறது. தற்போது திருப்பூரின் வருடாந்திர வர்த்தகம் 36 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இந்நிலையில் அரசின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும் பட்சத்தில் இன்னும் 3 ஆண்டுகளில் இதை ஒரு லட்சம் கோடியாக உயர்த்த முடியும் என்கின்றனர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com