நாய் ஒன்று ஹெல்மெட் அணிந்துகொண்டு இருச்சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து, ஓட்டுநரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு செல்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
இருச்சக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என தமிழக காவல்துறை வலியுறுத்தி வருகிறது. இதற்கான சட்டமும் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செல்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
இருச்சக்கர வாகனத்தின் ஓட்டுநர் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இல்லையென்றால் அபராதம் வசூலிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இந்த புது சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தியபோது சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு மட்டுமில்லாமல் தனது சிறுவயது மகனுக்கும் சிறிய ஹெல்மெட் வாங்கி அணிவித்து இருச்சக்கர வாகனத்தில் அழைத்து சென்றார். இதுகுறித்த புகைப்படம் வைரலானது. இதற்காக சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் அந்த நபரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
அந்த வகையில் தற்போது ஒரு ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது நாய் ஒன்று ஹெல்மெட் அணிந்துகொண்டு இருச்சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து ஓட்டுநரை இறுக்கமாக பிடித்துக் கொண்டு செல்கிறது. இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.