தென்காசி அருகே வெறிநாய் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

தென்காசி அருகே வெறிநாய் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு
தென்காசி அருகே வெறிநாய் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு
Published on

புளியங்குடியில் ஆட்டுப் பண்ணைக்குள் புகுந்து வெறிநாய் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழந்தன.

புளியங்குடி லெப்பைத் தெருவைச் சேர்ந்தவர் சேக் முகமது(56). இவர் சொந்தமாக ஆட்டுப்பண்ணை ஒன்று வைத்துள்ளார். இதனிடையே தென்காசி மாவட்டம் புளியங்குடி லெப்பைத் சாயபுரம் தெருப்பகுதியில் வெறிநாய்கள் அதிகமாக சுற்றித் திரிகின்றன. அவை அடிக்கடி ஆடு, கோழி ஆகியவற்றைக் கடித்து தூக்கிச் சென்றுவிடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், சேக் முகமதுவின் ஆட்டுப் பண்ணைக்குள் வெறிநாய் புகுந்து அங்குள்ள ஆடுகளை கடித்து குதறியுள்ளது. இதில் 8 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மேலும் ஒருஆடு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக ஆட்டுப்பண்ணை உரிமையாளர் சேக்முகம்மது தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் உடனே வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இழப்பீடு தொகையாக ரூ.65 ஆயிரம் வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் துணைத்தலைவர் அப்துல்ரஹ்மான் கோரிக்கை விடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com