ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகை? ராகுலுக்குப் பறந்த கடிதம்.. நடந்தது என்ன? விரிவான பின்னணி!

ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை
ஆம்ஸ்ட்ராங் கொலைபுதிய தலைமுறை
Published on

“பகுஜன் சமாஜ் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியிலிருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்’’

- என பகுஜன் சம்மாஜ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குக் கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. முன்னாள் காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமன் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவருடன் தொடர்புபடுத்தி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் ஜெய்சங்கர். என்ன நடந்தது? விரிவாகப் பார்ப்போம்...

ஆம்ஸ்ட்ராங் கொலை
’குமரியில் அணு கனிம சுரங்கம் அமைத்தால் இவ்வளவு பாதிப்பு’.. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சொல்வது என்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5-ம் தேதி மாலை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செம்பியம் போலீஸார் வழக்குப் பதிந்து பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 11 பேரை அடுத்தடுத்து கைது செய்து பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். பின்னர் கைதான 11 பேரையும் 5 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர்.

இதில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததோடு, முதல் தாக்குதல் நடத்தியது திருவேங்கடம் என்பது தெரியவந்தது. அவர், பதுக்கி வைத்திருந்த ஆயுதங்களை எடுப்பதற்காக, காவல்துறை அழைத்துச் சென்றபோது, என்கவுண்டர் செய்யப்பட்டார். ஏற்கெனவே மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் திருவேங்கடம் போலீஸாரை சுட, தற்காப்புக்காக அவரைச் சுட்டதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை
திருப்பத்தூர்: ‘ரூ 14,000 கடனை திருப்பித்தரவில்லை’ - நண்பன் மீதான கோபத்தில் 2 குழந்தைகளை கொன்ற நபர்!

அதனைத் தொடர்ந்தும் பல முக்கியப் பிரமுகர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில், இளைஞர் காங்கிரஸின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் அஸ்வத்தாமனை ஆகஸ்ட் 7-ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து, வேலூர் சிறையில் இருந்த அவரின் தந்தை ரவுடி நாகேந்திரனும் கைது செய்யப்பட்டார். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து தனித்தனியாகவும் இருவரையும் ஒன்றாக அமர வைத்தும் தனிப்படை போலீஸார் மிகத் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அஸ்வத்தாமன் - நாகேந்திரன்
அஸ்வத்தாமன் - நாகேந்திரன்

அதில், “இனியும் ஆம்ஸ்ட்ராங்கை விட்டால், வட சென்னையில் அரசியல் செய்ய முடியாது என உணர்ந்ததால் தந்தை நாகேந்திரனிடம் கூறி ஆம்ஸ்ட்ராங்கை தீர்த்துக் கட்டச் சொன்னேன்” என அஸ்வத்தாமன் போலீஸிடம் கூறியதாக செய்திகள் வெளியாகின. மறுபுறம், காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் அஸ்வத்தாமன்.

இந்தநிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை
தம்பி விஜய்யிடம் ஏன் இதை அன்று கேட்கவில்லை? - சீமான்!

அதில்,

"பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகுதான் அவர் காங்கிரசில் இணைந்தார். அவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால்தான் அவர் கைதாகவில்லை என்றும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால்தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இத்துடன், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்த சமூக வலைத்தள பதிவுகளையும் கடிதத்தோடு இணைத்திருக்கிறார்.

இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், ``என் மீது யாரோ ஒருவர் வைக்கும் குற்றச்சாட்டிற்கு பதில் அளிக்க முடியாது’’ எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார் செல்வப்பெருந்தகை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com