கட்டப்பஞ்சாயத்தை அடுத்து ஸ்கிராப் பிசினஸ் விவகாரம்? ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விரிவடையும் விசாரணை!

ஆற்காடு சுரேஷ் படுகொலை, கட்டப்பஞ்சாயத்து விவகாரம், ஸ்கிராப் பிசினஸ் மோதல் விவகாரம் என பல கோணங்களில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தற்போது விரிவடைந்துள்ளது.
சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங்
சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங்pt web
Published on

செய்தியாளர் ஜெ.அன்பரசன்

ஸ்லிராப் பிசினஸில் இருக்கும் போட்டி

சென்னையின் புறநகர் பகுதிகளின் முக்கிய பிசினஸ் ஸ்கிராப் பிசினஸ் (பழைய பொருட்கள்). நாள் ஒன்றுக்கு பல நூறு கோடிகள் முழங்கும் பிசினஸை யார் கைப்பற்றுவது என்ற போட்டியில், நிழல் உலக தாதாகளுக்கு மத்தியில் எப்போதும் சண்டை நிலவி வருவது வழக்கம்.

ஆம்ஸ்ட்ராங்
ஆம்ஸ்ட்ராங் pt web

ஏற்கனவே சோழவரம் நிலம் கைமாறுதல் தொடர்பான கட்டப் பஞ்சாயத்து, திருவள்ளூர் பில்டர்ஸ் தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகளில் நேரடியாக ஆம்ஸ்ட்ராங்கிற்கு பல்வேறு வகைகளில் ரவுடிகள் மற்றும் நிழல் உலக தாதாக்களோடு பிரச்னை ஏற்பட்டு வந்த நிலையில், சென்னை புறநகர் பகுதிகளில் முக்கிய பிசினஸாக பார்க்கப்படும் ஸ்கிராப் பிசினஸிலும் ஆம்ஸ்ட்ராங் தரப்பின் தலையீடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

ஸ்கிராப் பிசினஸ் கட்டப்பஞ்சாயத்துகளில், தற்போது வரை அத்தகைய இடங்களுக்கு செல்லாமலேயே கட்டப்பஞ்சாயத்துகளை செய்து வந்தவர் சம்போ செந்தில் என போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.

சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங்
#BREAKING |அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் ஜோ பைடன் - கமலா ஹாரிஸை நிறுத்துவதற்கு ஆதரவு

சம்போ செந்திலுக்கான லுக் அவுட் நோட்டீஸ்

சம்போ செந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தேனாம்பேட்டை பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த ரவுடிகளான சிடி மணி மற்றும் காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் மீது வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சம்போ செந்தில் தலைமறைவானார். அப்போது அவர் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருப்பதற்காக 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் லுக் அவுட் நோட்டீஸ் தேனாம்பேட்டை போலீசாரால் பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

சம்போ செந்தில்
சம்போ செந்தில்

இதன்பிறகு அவரது மனைவி விவாகரத்து பெற்று ஓஎம்ஆர் பகுதிக்கு சென்றதாகவும், சிஐடி நகரில் மனைவி தனியாக பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. தொடர் விசாரணையில், இருவரும் தலைமறைவாகியுள்ள விவகாரமானது தற்போது தெரியவந்துள்ளது.

சம்போ செந்தில், ஆம்ஸ்ட்ராங்
“துணை முதல்வர் பதவி என்றால் யார் வேண்டாம் என்பார்கள்” - அமைச்சர் துரைமுருகன்

பல்வேறு கோணங்களில் நீளும் விசாரணை

சம்போ செந்தில் மீது லுக் அவுட் நோட்டீஸ் தற்போது வரை இருந்து வரும் நிலையில் போலி பாஸ்போர்ட்டுகள் மூலம் இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்ஸ்ட்ராங்க் - சம்போ செந்தில்
ஆம்ஸ்ட்ராங்க் - சம்போ செந்தில்புதிய தலைமுறை

தற்போதும் சம்போ செந்தில் தலைமறைவாக இருந்தாலும் சென்னை புறநகர் பகுதிகளில் நடக்கும் ஸ்கிராப் பிசினஸில் ஆதிக்கம் செலுத்தி வருவதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆற்காடு சுரேஷ் படுகொலை, கட்டப்பஞ்சாயத்து விவகாரம், ஸ்கிராப் பிசினஸ் மோதல் விவகாரம் என பல கோணங்களில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம் தற்போது விரிவடைந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com