கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது 3 பிரிவுகளில் வழக்கு

கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது 3 பிரிவுகளில் வழக்கு
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது 3 பிரிவுகளில் வழக்கு
Published on

குறிப்பிட்ட‌ சமூகத்தினரை குறித்து இணையதளங்களில் இழிவான தகவல்களை பரப்பியதாகக் கூறி, கக்கூஸ் ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளரான மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாஸ்கர் மதுரம் என்பவர், திவ்ய பாரதி மீது கடந்த 31 ஆம் தேதியன்று ஒத்தகடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளார்.

அதில், கக்கூஸ் ஆவணப்படத்தில் தான் பிறந்த சமூகத்தினரை மலம் அள்ளும் தொழில் செய்து வருவதாக சித்தரிக்கப்பட்டிருப்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தங்கள் சமூகத்தினர் வேளாண் தொழில் செய்து வந்தவர்கள் என்றும், தவறான தகவல்களை ஆவணப்படம் மூலம் தெரிவித்துள்ளதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார். அதையடுத்து, திவ்யபாரதி மீது 3 பிரிவின் கீழ் ஒத்தகடை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com