கடலூர் மாவட்டத்தில், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக, மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள், மார்ச் 31ஆம் தேதி வரை பணியாற்றலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மினி கிளினிக் மூடப்படுவதாக, அறிவிப்பு வெளியானதால், கடலூரில் உள்ள 66 கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு வேலை இல்லை என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனைக் கண்டித்து, சுகாதாரத்துறை அலுவலகத்தில் மருத்துவப் பணியாளர்கள் கண்ணீருடன் குவிந்தனர். இது குறித்து புதிய தலைமுறையில் செய்தி வெளியிடப்பட்டதையடுத்து, மினி கிளினிக்கில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள், வருகிற மார்ச் 31ஆம் தேதி வரை பணியாற்றலாம் என தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிகமாக மகிழ்ச்சியை அளித்தாலும், மாற்றுப் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.