கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து; ஒருவர் கைது!

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை ஒட்டி அரசுக்கு பலர் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
மருத்துவருக்கு கத்திக்குத்து
மருத்துவருக்கு கத்திக்குத்துபுதிய தலைமுறை
Published on

சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை நோயாளியின் உறவினரொருவர் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் சமூக வலைதளப்பக்கத்தில் “கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

மருத்துவர் பாலாஜி
மருத்துவர் பாலாஜி

இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன். அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது.

மருத்துவருக்கு கத்திக்குத்து
‘மாணவர் மனசு’ | பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு!

இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்” என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே சம்பவம் நடந்த கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “அரசு மருத்துவமனையில் அரசு மருத்துவருக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது, இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். அதேநேரம் இச்சம்பவத்தை கண்டித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பல எதிர்க்கட்சிகளும்கூட, அரசுக்கு கண்டனம் தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com